2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தெரிவுக்குழுவுக்கு செல்வது எமக்கு நாமே பிரச்சனையை உருவாக்குவதாக அமையும்: சி.வி

Kogilavani   / 2014 ஜூன் 10 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

'நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்வதானது எமக்கு நாமே பிரச்சனையை உருவாக்குவதாக அமையும்' என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையில்; அட்டவனைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு  செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றது. இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'எமது கட்சியின் கருத்தாக இல்லாமல் எனது கருத்தாக தெரிவுக்குழு விடயத்தில் சிலவற்றை செல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

தெரிவுக்குழுவிற்கு சென்றால் பிரச்சனையை உருவாக்கி கொள்வதாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதுவரை காலமும் பலவிதமான குழுக்கள் தமிழர்களுடைய பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஒரு தீர்வு யோசனை முன்வைக்கப்பட்டது.

அதனை முன்வையுங்கள். திஸ்ஸவிதாரன குழு ஒரு அறிக்கையை தந்துள்ளது. அதனையும் முன்வையுங்கள்.

இன்னும் வேறுவேறு அறிக்கைகள் இந்த பிரச்சனைகள் தொடர்பாக தரப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் முன்வைத்து அதனை மையமாக கொண்டு அதனை அடிப்படையாக கொண்டு நாடாளுமன்ற தெரிவுக்குழு விவாதிப்பதாக இருந்தால் எமது தமிழ் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.

ஏனென்றால் அடிப்படையை நிர்ணயித்து அதனை செயற்படுத்தாது விட்டோமானால் அங்கு நாம் செல்வதால் எந்தவிதமான பலனும் கிடைக்காமல் இருப்பதையும் நாம் இழந்து வரும் கட்டம் ஏற்படக்கூடும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X