2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

எனக்கு எதிராக நூறு மடங்கு எழுதினாலும் நான் பயப்படபோவதில்லை: றிசாட்

Kogilavani   / 2014 ஜூன் 10 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


'எந்த பத்திரிகைகளை எடுத்தாலும் என்னை பற்றி அதிகமாக விமர்சிக்கின்றார்கள்.; அதற்கு அஞ்சப்போவதில்லை. இன்னும் நூறு வீதம் எழுதினாலும்  நான் பயப்படபோவதில்லை' என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

செட்டிகுளம் பிரதேச செயலகத்தல் இடம்பெற்ற நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'வட மாகாணத்திலே வாழ்கின்ற தமிழ், முஸலிம், சிங்கள் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றோம். இவ்வாறு வாழ்கின்ற சூழலை குழப்புவதற்காக அல்லது எங்களுக்கிடையில் சில விடயங்கள் திணிக்கப்படுகின்றபோது அதை எவ்வாறு நாம் தடுக்கப்போகின்றோம்.

தமிழ் தரப்பு மாத்திரம் தடுத்து அதில் வெற்றி பெறமுடியுமா? அல்லது சிறுபான்மையாக இருக்கின்ற இஸ்லாமியர்களையும் நியாயமாக சிந்திக்கின்ற பரம்பரையாக வாழ்கின்ற சிங்கள சகோதரர்களையும் இணைத்துக்கொண்டு நியாயத்திற்காக போராடப்போகின்றோமா?

காணி விடயங்களை கையாளுகின்றபோது சிங்கள உறுப்பினர்களையும் முஸ்லிம் உறுப்பினர்களையும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு போகின்ற போது அது இனவாத சிந்தனையுடன் பார்க்கப்பட முடியாது.

இன்று இந்த பிரதேசத்தில் வாழும் விவசாயிகளுக்கு விவசாய நிலம் இல்லை. விவசாயத்தை பரம்பரையாக செய்த நிலத்தை பறித்தெடுத்து இதை நீங்கள் செய்யுங்கள் என கூறுவது இந்த பிரதேசத்து மக்களின் வாழ்வை மிகவும் அசிங்கப்படத்தும் அல்லது இன்னும் துன்பப்படுத்தும் என நாங்கள் எல்லோரும் சேர்ந்து பேசுகின்ற போது நாங்கள் நியாயமான தீர்வை நோக்கி பயணிக்கலாம்.

அதைவிட பலவிதமான குற்றச்சாட்டு அண்மைக்காலமாக என்மீது சுமத்தப்படுகின்றது. அதாவது முஸ்லிம்களை கொண்டு வந்து குடியேற்றுகின்றோம்;. முஸ்லிம் மக்களுக்கு காணிகளை எடுத்துக்கொடுக்கின்றோன். முஸ்லிம் மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கின்றார் என்ற குற்றச்சாட:டுக்கள் என்மீது உள்ளது. 

யதார்த்தத்தை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். 20 வருடங்களுக்கு இடம்பெயர்ந்த முஸ்லிம்;கள் முன்பு 200 ஆக சென்றவர்கள் 400 ஆக வருகின்றார்கள். அல்லது அவாகள் இருந்த கிராமங்களில் புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை நாம் தடுக்க முடியாது' என அவல் மேலும் தெரிவித்தார்.

இந் நாட்டில் பிரச்சனை தீரவேண்டும் என் பலரும் பேசினாலும் ஒவ்வெnருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கின்றது. இதில் 5 வீதமானவர்கள் இந்த பிரச்சனை தீர்க்கப்படக்கூடாது என்ற சிந்தனையில் இருந்தாலும் 95 வீதமானவர்கள் பிரச்சனைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் உள்ளர்கள்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X