2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் உரிமைகள் மற்றும் மதுபாவனை பற்றிய செயலமர்வு

Kanagaraj   / 2014 ஜூன் 10 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.தபேந்திரன்


கிளிநொச்சி  மாவட்ட கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மலையாள்புரம் பகுதி மக்களுக்கு சிறுவர் உரிமைகள், மதுபாவனை தொடர்பான கருத்துரை வழங்கும் நிகழ்வு கிராம அலுவலர் பொதுநோக்கு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது.

சமுர்த்தி அதிகார சபை (திவிநெகும) ஏற்பாடு செய்த இந்த கருத்துரை வழங்கும் நிகழ்வில், சிறுவர் பாதுகாப்பு பிரிவின் கிளிநொச்சி மாவட்;ட உத்தியோகத்தர் இராஜரட்ணம் செந்தூரன், கிளிநொச்சி வைத்தியசாலை உள, சமூகப்பணியாளர் எஸ்.இராஜேந்திரா ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள்.

குடும்பங்களிலுள்ள உறுப்பினர்களின் மதுப்பாவனையால் குடும்பத்திலுள்ள சிறுவர்கள் பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக இதன்போது எடுத்துக்கூறப்பட்டது.

அத்துடன், மதுப்பாவனை சிறுவர்களையும் தவறான வழிகளில் இட்டுச் செல்வதனால் குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் தங்கள் மதுப்பாவனையைத் தவிர்த்து சிறுவர்களின் நலன்களில் அக்கறை செலுத்தும் படி இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மலையாள்புரம் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் உள்ளிட்டவற்றின் உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X