2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தேசிய சமூக ஒருமைப்பாட்டு வாரத்துக்கு ஏற்பாடு

Menaka Mookandi   / 2014 ஜூன் 11 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தேசிய சமூக ஒருமைப்பாட்டு வாரத்தை முன்னிட்டு விசேட முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று செவ்வாய்க்கிழமை (10) மன்னார் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்றது.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் வருடந்தோறும் தேசிய சமூக ஒருமைப்பாட்டு வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இவ்வருடத்திற்கான தேசிய சமூக ஒருமைப்பாட்டு வாரம் எதிர்வரும் யூலை 14ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்பட இருக்கின்றது.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (10) இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் மாவட்ட அலுவலகர், அமைச்சின் பிரதிநிதிகள், செயலக அதிகாரிகள், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்..

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X