2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பெண்களை அவதூறாகப் பேசித் தாக்கியவர் கைது

Kogilavani   / 2014 ஜூன் 12 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, இந்துபுரம் பகுதியில் பெண்களை தவறான வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டு, சங்கிலியினால் தாக்குதல் மேற்கொண்டு வந்த வயோபதிபரை திருமுறிகண்டிப் பகுதியில் வைத்து புதன்கிழமை (11) இரவு 8 மணிக்கு கைதுசெய்ததாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்துபுரத்தினைச் சேர்ந்த சிதம்பரம் இராசநாயகம் (70) வயோதிபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவந்தனர். குறித்த நபர் தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில் புதன்கிழமை (11) இரவு திருமுறிகண்டிப் பகுதியில் மறைந்திருந்த வேளையில் பொலிஸார் அவரைக் கைதுசெய்தனர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X