2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இறால் கூடுகள் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டன

Kanagaraj   / 2014 ஜூன் 13 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கௌதாரி முனை கடற்பரப்பிலிருந்து, தடை செய்யப்பட்ட 175 இறால் கூடுகள் கைப்பற்றப்பட்டு அவை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பிரதிப்பணிப்பாளர் ஆர்.ரவீந்திரன் இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் பூநகரி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் போது, கடற்றொழிலாளர்களின் நலன்கருதியும் வெளிநாட்டு செலாவணியை ஈட்டித்தரும் இறாலின் வளர்ச்சியை கருத்திற் கொண்டும் ஐ_ன் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து இறால் கூடுகளை பயன்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், கௌதாரி முனை கடற்பரப்பிற்பில் இறால் கூடுகள் போடப்பட்டு இறால் பிடிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலினையடுத்து அங்கு சென்று, அங்கிருந்த 175 இறால் கூடுகளையும் கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.

குறித்த இறால் கூடுகளினால் இறாலின் வளர்ச்சியும் பாதிக்கப்படுவதுடன், சிறிய ரக மீன்களும் அழிவடைந்துவிடும் எனவும் இதனாலேயே குறித்த கூடுகள் பாவிப்பதை தடை செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X