2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தேன் புரைக்கேறி கிராம அலுவலர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 16 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தின்  கள்ளிக்குளம், கத்தார்சின்னக்குளம் ஆகிய பிரிவுகளில்  கிராம அலுவலராக பணியாற்றிவந்த  02 பிள்ளைகளின் தந்தையான  எஸ்.பெனடிற் (வயது 59) என்பவர் தேன் புரைக்கேறியதால்  உயிரிழந்ததாக  வவுனியா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்தார்சின்னக்குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது  அலுவலக வளாகத்திலிருந்த  தேன்கூட்டை சனிக்கிழமை (14) மாலை பிரித்து அதிலுள்ள தேனை இவர் பருகிக்கொண்டிருந்தார். இதன்போது தேன்கூட்டின் வதையிலிருந்த  குளவி ஒன்று இவரை கொட்டியதால், அதனை தடுப்பதற்கு முற்பட்டபோது  தேன் புரக்கேறியது.

இந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலைக்கு இவர் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துவிட்டதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நீண்டகாலமாக மக்களுடன் சிநேகபூர்வமாக பணியாற்றிய கிராம அலுவலகர் என்ற நற்பெயரை கொண்ட இவர் இக்கிராம அலுவலர் பிரிவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் என ஏனைய கிராம அலுவலர்கள்  தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X