2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வவுனிக்குளம் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 16 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன் 


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வவுனிக்குளம் நீர்ப்பாசனக்குளத்தின் புனரமைப்பு பணிகள் இவ்வருடத்தின் ஜனவரி மாத இறுதியில் முடிவடைந்துள்ளதாக அம்மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று திங்கட்கிழமை (16) தெரிவித்தது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாரிய குளங்களில் ஒன்றான இக்குளம் கடந்த 30 வருடங்களாக புனரமைக்கப்படாதிருந்தது.

இந்நிலையில் 'முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட இடங்களை அபிவிருத்தி செய்தல்' என்னும் திட்டத்தின் கீழ், இக்குளத்தை புனரமைப்பதற்கு 2012ஆம் ஆண்டு 600 மில்லியன் ரூபா நிதி கிடைத்தது.

இந்நிதியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தில் 320 மில்லியன் ரூபா செலவில் இக்குளம் புனரமைக்கப்பட்டதுடன், எஞ்சிய நிதியில் நீர்ப்பாசனக் கால்வாய்களும் கழிவு வாய்க்கால்களும் புனரமைக்கப்பட்டு, வேலைத்திட்டங்கள்  முடிந்துள்ளன.

இக்குளத்தின் மூலம்; 6 ஆயிரத்து 60 ஏக்கரில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X