2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மக்களை மிரட்டி பொலிஸார் பொய் வழக்கு பதிவு செய்வதாக குற்றச்சாட்டு

Kogilavani   / 2014 ஜூன் 20 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

மக்களை மிரட்டி பொலிஸார் பொய் வழக்கு பதிவு செய்வதாக வட மாகாணசபை உறுப்பினர் சி.சிவமோகன் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

'வன்னி பிரதேச மக்கள் பல கஷ்;டங்களுக்கு மத்தியில் தாங்கள் பெற்றுக்கொண்ட வீடமைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல நாள் அலைச்சலுக்கு பின் கிடைக்கும் பிரதேச செயலக மணல் அனுமதி பத்திரங்களுடன் மணல் எடுக்க செல்லும் போது வன்னி பிரதேசத்தில் கடமையில் உள்ள பொலிஸார் நயவஞ்சகதனமாக நடந்து கொள்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அனுமதிபத்திரம் இருந்தும் பொய்வழக்குப் பதிவிற்கு உட்படும் எமது மக்கள் மோசமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். சட்டம் என்ற வலைக்குள் எமது வன்னி பிரதேச மக்களின் இயலாமையை சிக்க வைத்து பொலிஸார் நீதி, நியாயம் அற்ற முறையில் பொய் வழக்குகள் பதிவு செய்கிறார்கள்.

தமக்கு அனுமதி பத்திரம் பிரதேச செயலாளர்களால் வழங்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையில் மணல் ஏற்ற செல்லும் எமது மக்கள் பொலிஸாரின் நயவஞ்சகவலைகளில் சிக்கிக் கொள்கின்றனர். குற்றத்தை செய்யாத எமது மக்கள் சோடிக்கப்பட்ட பொய்குற்றங்களை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

குற்றவாளி என ஏற்றுக்கொள்ளாவிட்டால் தங்கள் வாகனத்தையும் நீதிமன்றத்தில் பறிகொடுத்துவிட்டு காசுப்பிணையில் வெளியே வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும், பின்னர் நிரபராதி என நிருபிப்பதற்கு எத்தனை தவணைகள் செல்லுமோ என்ற பயமும் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இத்தனைக்கும் மணல் அனுமதிப்பத்திரம் வழங்கும் பிரதேச செயலாளர்கள் தாம் ஒப்பமிட்டு விட்டால் போதும்  என செயல்படுகின்றார்கள். இவ்வாறு இருக்கையில் பேரினவாத பொலிஸாரால் தமது குரோதத்தனத்தை காட்ட அனுமதிக்கமுடியுமா? இது விடயத்தில் பிரதேச செயலர்கள் கரிசனை கொள்ளவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது மக்களுக்காக பிரதேச செயலர்கள் தமது எதிர்ப்புக்களை அரச அதிபர் ஊடாக வன்னி மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்த முன் வரவேன்டும்' என  மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X