2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விசேட கலந்துரையாடல்

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


சமாதானத்திற்கும், மீள் இணக்கத்திற்குமான வளங்கள்(ஆர்.பி.ஆர்) அமைப்பின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் சர்வமத பேரவை தனது செயற்பாட்டின் ஒரு நிகழ்வாக, மதத் தலைவர்களை ஒன்றிணைத்து அவர்கள் மத்தியில் வெளிப்படையான கலந்துரையாடல் ஒன்றை இன்று சனிக்கிழமை(21) காலை மன்னாரில் நடைபெற்றது.

மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் புனர்வாழ்வு மையத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் சமாதானத்திற்கும்,மீள் இணக்கத்திற்குமான வளங்கள்(ஆர்.பி.ஆர்) அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் வி.எஸ்.செல்வாநந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் உட்;பட சர்வமதத்தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், அருட்சகோதரிகள் உட்;பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார் தீவுப்பகுதியில் உள்ள சர்வமதத்தலைவர்கள் மத்தியில் இடம் பெறும் குறித்த நிகழ்வு, சர்வமதத் தலைவர்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துனர்வை ஏற்படுத்துதல், நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் சமூக வளர்ச்சி, மத ஒற்றுமையை மேம்படுத்துதல் தொடர்பில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X