2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவு விபத்தில்: கணவன் பலி,மனைவி படுகாயம்

Kogilavani   / 2014 ஜூன் 23 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற விபத்து சம்பவமொன்றின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தததாகவும் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பிலிருந்து பரந்தனுக்கு தேங்காய்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியொன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று நேருக்கு நேர் மோதியதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த விசுவமடு மேற்கினைச் சேர்ந்த புஸ்பராஜா சுமச்சந்திரன் (27) என்பவர் உயிரிழந்ததுடன், அவரது மனைவி சுமச்சந்திரன் மலர்வதி (26) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இவர்களுடன் பயணித்த இவர்களின் குழந்தை எவ்வித பாதிப்புக்களுமின்றி உயிர்தப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து பாரவூர்திச் சாரதி கைது செய்யப்பட்டதுடன், குறித்த பாரவூர்தியும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X