2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விபத்திற்குள்ளான சிறுவனின் மூளை செயலிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 25 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை விபத்திற்குள்ளான  சிறுவன் ஒருவனின் மூளை இறந்துள்ளது. இந்த நிலையில், செயற்கை சுவாசம் அளித்து வருவதாக   வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியை சேர்ந்த எஸ்.மதுசன் (வயது 6) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற பேருந்தில் பயணித்துள்ளார். இந்தப் பேருந்து தாண்டிக்குளம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு முன்பாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்டபோது அதே திசையிலிருந்து வந்த வாகனம் ஒன்று  இந்தச் சிறுவனை மோதியது. இதில் காயமடைந்த சிறுவனை வவுனியா பொது வைத்தியசாலையின்  அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தபோதிலும், மூளை இறந்துவிட்டது.  இருப்பினும், செயற்கை சுவாசமளித்து  வருவதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X