2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இன, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சர்வமத வழிபாடு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 26 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இன, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி  கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து, பௌத்த மதத்தவர்கள்  ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த சர்வமத வழிபாடு நேற்று புதன்கிழமை (25) மாலை மன்னார் பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.

மன்னார் ஆர்.பி.ஆர். அமைப்பின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையால் குறித்த சர்வமத வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை உட்பட சர்வமதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அளுத்கமை, பேருவளை, தர்காநகர் போன்ற பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால்  உயிரிழந்தவர்களுக்காக  பிரார்த்தனை செய்யப்பட்டது அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X