2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அடம்பனில் புதிய சிறுவர் பூங்காவும் விளையாட்டு மைதானமும்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 29 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவும் விளையாட்டு மைதானமும் சனிக்கிழமை (28) திறந்துவைக்கப்பட்டுள்ளன.

நெல்சிப் திட்டத்தின் கீழ், 9.1 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில்; மாந்தை மேற்கு பிரதேச சபையால் சிறுவர் பூங்காவும் விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டன.

குறித்த  விளையாட்டு மைதானத்தில் மரமும் நாட்டப்பட்டது.

இதன் பின்னர் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட அணிக்கும் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்;பட்ட அணிக்குமான கால்பந்தாட்ட போட்டியும் நடைபெற்றது.

மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் எஸ்.வரப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிசாட் பதியுதீன், தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசத்தி ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X