2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மாங்குளம் பொதுச்சந்தைக்கு புதிய கட்டிடம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 29 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்;பு பிரதேச சபைக்குட்பட்ட மாங்குளம் பொதுச் சந்தைக்கான புதிய கட்டிடத்தொகுதி வேலைகள் இம்மாத முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச சபைச் செயலாளர் எஸ்.மிதிலைநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) தெரிவித்தார்.

நெல்சிப் திட்டத்தின் கீழ்;, 55 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இச்சந்தையானது 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தால் முற்றாக அழிவடைந்தது.  

இந்நிலையில், 2000ஆம் ஆண்டு  இச்சந்தைக்கான  புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு, சந்தை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன.  எனினும், இறுதிக்கட்ட  யுத்தத்தின்போது மீண்டும் இச்சந்தைக் கட்டிடம் அழிவடைந்ததாகவும் அவர் கூறினார்.

2010ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் மாங்குளம் பகுதியில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில்,  சந்தை நடவடிக்கைக்கு  கட்டிடம் இல்லாமையால் இச்சந்தை இயங்காதிருந்தது.

தங்களுடைய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக சந்தை அமைத்துத் தருமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் புதுகுடியிருப்பு பிரதேச சபையிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

கட்டிடம் அமைக்கும் பணிகள் இவ்வருட இறுதிக்குள் முடிவடைந்து, சந்தை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X