2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பண்டாரவன்னியன் தினத்தை மாற்றியமைக்க கோரி கோரிக்கை

Super User   / 2014 ஜூன் 30 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தனிம் கபில்நாத்

வன்னிப் பிரதேசத்தின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தினத்தை வருடம் தோறும் ஓகஸ்ட் மாதத்தில் அனுஷ்டிக்குமாறு பொது அமைப்புக்களால் நகரசபைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபையின் செயலாளர் சி. சத்தியசீலன் தெரிவித்தார்.

வவுனியா நகர வரியிறுப்பாளர்கள் சங்கம், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், பண்டாரவன்னியன் நற்பணி மன்றம், வன்னி மக்கள் முன்னேற்றக்கழகம், வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், சிக்கன கடன் கூட்டுறவுச்சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்தே இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வன்னி பிரதேசத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் நினைவுதினம் பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்ட ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி இதுவரை காலமும் நகரசபையினால் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.

இதனால், இத்தினத்தை விடுத்து வெள்ளையனிடமிருந்து முல்லைத்தீவு கோட்டையை தகர்த்த நாளான ஓகஸ்ட் 25ஆம் திகதி அனுஷ்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கையை நகரசபை கவனத்தில் எடுத்துள்ளதுடன் எத்தினத்தில் பண்டாரவன்னியன் தினத்தை அனுஷ்டிப்பது என்பது தொடர்பாக எதிர்வரும் தினங்களில் பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X