2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விபத்து: ஒருவர் பலி, மூவர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


வவுனியா, ஓமந்தையை அண்மித்த பிரதேசமான நொச்சிமோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை (04) இரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் பலியானதுடன்  மூவர் படுகாயாமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றுடன் மோதியதில் குறித்த வேன் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வேனில் பயணித்தோரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய மூவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X