2025 ஜூலை 19, சனிக்கிழமை

புராதன சின்னங்கள் தொல்பொருள் திணைக்களத்தில் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 10 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி சின்ன பூவரசங்குளம் பிரதேசத்திலுள்ள வீட்டுத்தோட்டமொன்றிலிருந்து  மீட்கப்பட்ட  பண்டையகால சிற்பத்துடன் கூடிய புராதனச் சின்னங்களை அம்மாவட்ட தொல்பொருள் திணைக்களத்திடம் மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர புதன்கிழமை (09)  ஒப்படைத்துள்ளார்.

மேற்படி வீட்டுத்தோட்டத்துக்குச் சொந்தமான ராஜேஸ்வரி என்ற பெண், கச்சான் செய்கைக்காக மண்ணை செவ்வாய்க்கிழமை (08) பதப்படுத்தினார். இதன்போது, நிலத்தினுள் பொம்மை போன்ற உருவம் காணப்பட்டதைக் கண்டு இவர்  அயலவர்களுக்கு தெரியப்படுத்தினார்.

இதன் பின்னர், அயலவர்களும் இணைந்து அங்கு மேலும் மண்ணை கிண்டியபோது பானையொன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இது தொடர்பில் வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு தகவல் வழங்கிய நிலையில், குறித்த இடத்துக்கு வந்த மாவட்ட அரசாங்க அதிபர் மட்பாண்டம்  மற்றும்  சிலையொன்றையும் பார்வையிட்டார்.   இவை மாவட்ட செயலகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன.

இந்த நிலையில்,  இப்புராதான சின்ஙகள்  மீட்கப்பட்ட பகுதி தொல்பொருள்;  ஆய்வுக்காக பாதுகாக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X