2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஆடிப்பிறப்பை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டி

Suganthini Ratnam   / 2014 ஜூலை 13 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


ஆடிப்பிறப்பை முன்னிட்டு வவுனியா பாடசாலை மாணவர்களுக்கிடையில் போட்டிகள் இடம்பெற்று வருவதாக வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தெரிவித்தார்.

தமிழர் பண்டிகைகளில் ஒன்றான் ஆடிப்பிறப்பை முன்னிட்டு வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை  அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக வவுனியா பிரதேச செயலகத்தினால் இப்போட்டிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இப்போட்டிகளில் குழு பாடல், கட்டுரை வரைதல், பேச்சு என இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா பிரதேச செலயகத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் பங்கேற்றுள்ளன.

வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசாவின் வழிகாட்டலில் இடம்பெறும் இந்நிகழ்வுகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X