2025 ஜூலை 19, சனிக்கிழமை

குளவிக்கூட்டினால் மக்கள் அசௌகரியம்

Kogilavani   / 2014 ஜூலை 13 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா பஸ் நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள நீர்த்தாங்கியில், நீண்ட காலமாக கூடு கட்டியிருக்கும் குளவிகளினால் அப்பகுதி வர்த்தகர்களும் பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக, வவுனியா பஸ் நிலைய வர்த்தக சங்கத்தின் செயலாளர் எஸ். ஜெயச்சந்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடமையாற்றும் பலர் குளவி கொட்டிற்கு ஆளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பராமரிப்பிலேயே இந்நீர்த்தாங்கி உள்ளது. அதிகாலை பஸ் நிலையத்தில் உள்ள வர்த்த நிலையங்களுக்கு வருபர்கள் குளவிக்கொட்டிற்கு ஆளாகின்றனர் என்று வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் தெரிவிக்கின்றனர்.

நீர்த்தாங்கிக்கு அருகாமையில் அமைந்துள்ள அரச ஊழியர்களின் விடுதிகள், யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் என்பவற்றிற்கு வருகை தருவோர் இக் குளவிக்கூட்டினால் அச்சமடைந்து இருக்கின்றனர்.

இக்குளவிக்கூட்டு கலைக்கப்படாததினால் அது தற்போது அருகில் உள்ள மரங்களிலும் பரவி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பவற்றுக்கு தெரியப்படுத்தியும் இது வரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வவுனியா பஸ் நிலையதில் அமைந்துள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X