2025 ஜூலை 19, சனிக்கிழமை

முல்லைத்தீவு விபத்தில் ஒருவர் பலி

Menaka Mookandi   / 2014 ஜூலை 15 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 
பரந்தன் - முல்லைத்தீவு, ஏ – 35 வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை டிப்பர் வாகனமொன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மோட்டார் சைக்கிளில் பயணித்த தெல்லிப்பளை, வல்விளான் பகுதியைச் சேர்ந்த  எஸ்.சண்முகநாதன் என்பவரே விபத்தில் உயிரிழந்தவராவார். அவருடைய மகனான 27 வயது இளைஞரே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரந்தனிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வந்த டிப்பர் ரக வாகனமும் புதுக்குடியிருப்பிலிருந்து பரந்தன் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுமே ஏ – 35 வீதியின் 4ஆம் கிலோ மீற்றர் கட்டையடியில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

விபத்துக்குள்ளான டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டார் எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X