2025 ஜூலை 19, சனிக்கிழமை

வவுனியா நகரசபை சுத்திகரிப்புத் தொழிலை தனியார் மயப்படுத்த வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 16 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா நகரசபையின் சுத்திகரிப்புத் தொழிலை தனியார் நிறுவனத்திடம் வழங்க வேண்டும் என்று வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம் கேரிக்கை விடுத்துள்ளது.

வவுனியா நகரசபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டங்களில்; ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் வரியிறுப்பாளர் சங்கப் பிரதிநிதிகள், வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் காஞ்சன அசங்ககுமாரவை அவரது அலுவலகத்தில்  நேற்று செவ்வாய்;க்கிழமை (15) சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போதே அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். 

இதன்போது, நகரசபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டங்களினால் வர்த்தகர்கள் மற்றும் வரியிறுப்பாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகத்; தெரிவித்தனர்.

மேலும், வரியிறுப்பாளர்களின் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கப்பட்டு வருவதன் காரணமாக  இவ்வாறான வேலைநிறுத்த போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் கூறினர்.

இதேவேளை, நகர சுத்திகரிப்புத் தொழிலை தனியார் மயப்படுத்தி சீராக சுத்திகரிப்புப் பணியை மேற்கொள்வதற்கு வடமாகாணசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், இது தொடர்பில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆவண செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இதன்போது, வவுனியா நகர ஆலோசனைக் குழுவொன்றை அமைப்பது தொடர்பிலும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கலந்துரையாடியதாக வவுனியா நகர வரியிறுப்பளார் சங்கத் தலைவர் எஸ்.சந்திரகுமார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X