2025 ஜூலை 19, சனிக்கிழமை

தமிழறிஞர் அகளங்களின் மணிவிழா நிகழ்வுகள்

Super User   / 2014 ஜூலை 16 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

தமிழறிஞர் கலாநிதி தமிழ்மணி அகளங்கனின் மணிவிழா நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) காலை 9 மணிக்கு வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கலைஞர் உடுவை சி.தில்லைநடராஜா தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில், மணிவிழா மலர் வெளியீட்டை விழாக்குழுத்தலைவர் ஓ.கே.குணநாதன் நடாத்தவுள்ளார். அறிமுக உரையினை விழாக்குழுவின் துணைத்தலைவர் எஸ்.எஸ்.வாசன் நிகழ்த்தவுள்ளார். சிறப்புரையை யாழ்.தேசிய கல்வியிற் கல்லூரி விரிவுரையாளர் மு.கௌரிகாந்தன் நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் முற்றத்துக்கரடி என்ற சிறுகதைத் தொகுப்பு, வன்னிப்பிரதேச வயற்பண்பாடு ஆய்வு நூல் ஆகிய இரண்டு நூல்களும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளன. அத்துடன் தமிழ் வாழ்த்து இறுவட்டும் வெளியிட்டு வைக்கப்படும்.

முற்றத்துக் கரடி நூலுக்கான சிறப்புரையை சப்பிரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரனும், வன்னிப்பிரதேச வயற்பாடுகள் நூலுக்கான சிறப்புரையை யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி கந்தையா ஸ்ரீ கணேசனும், இறுவட்டுக்கான சிறப்புரையை வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் இலக்கியச்சுடர் ஐ.கதிர்காமசேகரன் ஆகியோர் நிகழ்த்துவர்.

வாழ்த்துரைகளை, யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ், பேராசிரியர் செ.யோகராஜா, முன்னாள் வடகிழக்கு மாகாண சபை பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ச.அருளானந்தம், காப்பியக்கோ டாக்டர் ஜின்னா செரிபுதீன், அருட்தந்தை தமிழ் நேசன் அடிகள் ஆகியோர் வழங்குவார்கள்.

கௌரவ விருந்தினர்களாக வட மாகாண சபை அமைச்சர்களான டாக்டர் ப.சத்தியலிங்கம், த.குருகுலராஜா, கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன், விசேட அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்தி ஆனந்தன், அ.செல்வம் அடைக்கலநாதன், வினோக ராதலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X