2025 ஜூலை 19, சனிக்கிழமை

மன்னாரில் மகளிர் கண்காட்சி

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த மகளிர் அபிவிருத்தி நிலையங்களின் கண்காட்சி, மன்னார் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மெல், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், மன்னார் உதவி மாவட்டச் செயலாளர் எம்.பரமதாஸ் மற்றும் மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்த குமார், முசலி பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மன்னார் மாவட்டத்தில் மகளிர் அபிவிருத்தி நிலையங்களினால் தயாரிக்கப்பட்ட சுயதொழில் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில் குறித்த காண்கட்சியை வருகை தந்த அதிகாரிகள் ஆரம்பித்து வைத்து பார்வையிட்டனர்.

இதன்போது கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X