2025 ஜூலை 19, சனிக்கிழமை

மு.கா உறுப்பினர் பதவி நீக்கம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மன்னார் பிரதேச சபை தேர்தலில்; போட்டியிட்டு வெற்றியடைந்த தன்னை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஏ.எம்.எம்.றிஷாபி தெரிவித்தார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாகிய தன்னை, கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டமையானது உள்ளக அரசியல் பழிவாங்கல் என அவர் கூறினார்.

'தனது உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேர்தல் திணைக்களம்  அறிவித்துள்ளதோடு, வர்த்தமானி மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் பிரதேச சபையின் அங்கத்தவராக இதுவரையில் பணியாற்றி வந்த உறுப்பினர் ஏ.எம்.எம்.றிஷாபி, 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் திகதி தொடக்கம் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவதாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதனிடையே குறித்த பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.எம்.றிஷாபி, மேற்படி சபையின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் மன்னார் பிரதேச சபைக்கும் அறிவித்திருப்பதாக தெரிய வருகின்றது.

மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த உறுப்பினர் இவர், கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், மன்னார் பிரதேச சபைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில், சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக மன்னார் பிரதேசத்தில் உள்ளக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கனிசமான மக்கள் செல்வாக்கினை பெற்றுக்கொண்ட றிஷாபி, கட்சி உறுப்புரிமையில் இருந்து திடிரென நீக்கப்பட்டமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக தேர்தல் ஒன்றின் மூலமாக மக்களால் அவர்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுபவர்கள் தனிப்பட்ட அரசியல் குரோதங்களுக்காக பழிவாங்கப்படுவது மக்களின் பிரதிநிதி எனும் அந்தஸ்தை அவமரியாதை செய்வது போன்றதாகவே அமைந்துள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X