2025 ஜூலை 19, சனிக்கிழமை

நீதித்துறை மீதான நம்பிக்கையை சிதையவிடக்கூடாது: பிரதம நீதியரசர்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 18 , மு.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


நீதித்துறையின் மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சிதையவிடாது அதனைத் தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டும் என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.

வவுனியா நீதிமன்ற வளாகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற வவுனியா மாவட்ட நீதிமன்றக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'
யுத்தத்தின் பின்னர் இலங்கை துரிதமாக  அபிவிருத்தி அடைந்து வருவதுடன், கட்டடங்கள் மற்றும் வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டதை  அவதானிக்க முடிகிறது.

இவ்வாறான அபிவிருத்திகளினால் சட்டம் மற்றும் நீதித்துறையை கட்டியெழுப்ப முடியாது. மக்களுக்கு நீதித்துறையின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் அதனைச் சாத்தியப்படுத்த முடியும்.

இலங்கை வாழ் மக்கள் சட்டம் மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதுடன்,  அவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதே நீதித்துறையின் அபிவிருத்தியாகும்.

இலங்கையின் நீதிமன்றச் செயற்பாடுகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான மாற்றங்களினால் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தவும் தகவல்களை இலகுவாக பேணவும் முடியும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X