2025 ஜூலை 19, சனிக்கிழமை

உப உணவுப்பொருட்கள் உற்பத்தியிலும் அக்கறை செலுத்த வேண்டும்: ரூபவதி

Gavitha   / 2014 ஜூலை 19 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெற் பயிர்ச் செய்கையுடன் மட்டும் தங்கிவிடாமல் உப உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதிலும் அக்கறை செலுத்த வேண்டும்' என கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.

கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலுள்ள நீரினைக் கொண்டு 150 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட உப உணவு பயிர்ச் செய்கையின் அறுவடை நிகழ்வு வெள்ளிக்கிழமை (18) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தொடர்ந்து கூறுகையில்,

கிளிநொச்சி மாவட்;டம் நெல் உற்பத்தி செய்கின்ற மாவட்டமாக இருக்கின்றது. இதனால் ஏனைய உப உணவுப் பயிர்ச் செய்கை பற்றி விவசாயிகள் அக்கறை கொள்வதில்லை.

அத்துடன் முன்னைய காலங்களில் நெற் பயிர்ச் செய்கையினை மேற்கொண்டு, அதனை சேமித்து வைத்து விலைகள் அதிகரிக்கும் தருணங்களில் விற்பனை செய்து வந்தனர்.

ஆனால் தற்போது, வயலில் அறுவடை செய்தவுடனேயே நெல்லினை விற்பனை செய்யக்கூடிய வசதி விவசாயிகளுக்குக் கிடைத்துள்ளது.

இதனால், அவர்கள் தொடர்ந்து உப உணவு உற்பத்தியில் அக்கறை செலுத்த முடியும். கிளிநொச்சி மாவட்டத்தில் போசாக்கு உணவு மட்டம் அதிகரிப்பதுடன், அனைவருக்கும் தானியங்கள் கிடைப்பதற்கான வழிகளும் ஏற்படும்.

உப உணவு உற்பத்தியினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X