2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பயிர்ச் சிகிச்சை முகாம்

George   / 2015 ஜனவரி 26 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் நன்மை கருதி, விவசாய போதனாசிரியர் பிரிவுகளின் ஊடாக பயிர் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா, திங்கட்கிழமை (26) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கிளிநொச்சி மாவட்டம் ஒரு விவசாய மாவட்டமாக இருப்பதனால், விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்ட விவசாய விரிவாக்கல் அலுவலகத்தால் சகல போதனாசிரியர் பிரிவுகளிலும் பல்வேறு விவசாய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பயிர் செய்கைகளில் காணப்படுகின்ற நோய்த்தாக்கங்கள், அவற்றுக்கான சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றின் மூலம் விவசாயிகளுக்;கு அறிவுறுத்தல்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

விவசாயப் போதனாசிரியர்களிடமும், மாவட்ட விவசாயத் திணைக்களத்திடமும் இவ்வாறான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X