2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விதைநெல் கொடுப்பனவுகள் நிதி கிடைத்ததும் வழங்கப்படும்: மா.செ

Menaka Mookandi   / 2015 ஜனவரி 27 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டு இதுவரையில் விதை நெல்லுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாதுள்ள விவசாயிகளுக்கான நிதி, திறைசேரியிடம் கோரியுள்ளதாகவும் அந்நிதி கிடைக்கப்பெற்றதும் அதை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் செவ்வாய்க்கிழமை (27) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை நெல்லுக்குரிய கொடுப்பனவுகள் கமநல சேவை நிலையங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ள போதும், கிளிநொச்சி, புளியம்பொக்கணை ஆகிய கமநல சேவை நிலையங்களின்  கீழுள்ள விசாயிகளுக்கு இதுவரை கொடுப்பனவு வழங்;கப்படவில்லை.

இந்த விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டிய நிதி வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், இது திட்டமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிதியை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்; என்றும் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர், 'கிளிநொச்சி மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான விதை நெல் கொடுப்பனவுகளுக்காக 90 மில்லியன் ரூபாய் நிதி தேவையென மதிப்;பீடு செய்யப்பட்டு உரிய திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டது' என்றார்.

அத்துடன், 'இந்தக் கேரிக்கைக்கமைய திறைசேரியூடாக கடந்த 2014ஆம் ஆண்டு 50 மில்லியன் ரூபாய் நிதி கிடைத்தது. அவற்றை விவசாயிகளுக்கு வழங்கினோம். மிகுதி 40 மில்லியன் ரூபாய் நிதி  கிடைத்ததும் ஏனைய விவசாயிகளுக்கு வழங்;குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கமநலசேவை நிலையங்களினூடாக வழங்கப்பட்ட பட்டியலின் அடிப்படையிலேயே இந்தக் கொடுப்;பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக கிடைத்த நிதியை வேறுதேவைகளுக்கு பயன்படுத்தியது அல்லது குடிநீர் விநியோகத்துக்கு பயன்படுத்தியது என்று கூறப்படுவது முற்றிலும் தவறானது. குடிநீர் விநியோகத்துக்கான நிதி அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக  கிடைத்தது. அதற்கும் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக கிடைத்த விதை நெல் கொடுப்பனவு நிதிக்கும் தொடர்புகள் இல்லை' என அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X