2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் அதிகூடிய விலையில் அரிசி

Menaka Mookandi   / 2015 ஜனவரி 27 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கிராமப்புற வர்த்தக நிலையங்களில் அதிகூடிய விலையில் அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக செய்கையில் செய்கை பண்ணப்பட்ட நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டு ஒருமூடை நெல் 2,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இதனடிப்படையில் அரிசியின் விலையானது நிர்ணய விலையான 65 ரூபாய்க்கும் குறைந்த விலையில் காணப்படவேண்டும். ஆனால் ஒரு சில கிராமப்புறக் கடைகளில் 92 ரூபாய் வரையில் அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அத்துடன், எரிபொருட்களின் விலை அண்மையில் குறைக்கப்பட்ட போதும், தனியார் வர்த்தக நிலையங்களில் 165 ரூபாய்க்கு பெற்றோல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்படாமையால் இது தொடர்பான நடவடிக்கைகளை உடன் எடுக்கமுடியாது இருப்பதாகவும், தொடர்ந்து வரும் நாட்;களில் வினைத்திறனான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X