2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தொழிற்பயிற்சி அதிகாரசபையால் விண்ணப்பங்கள் கோரல்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 28 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வவுனியா அலுவலகத்தினால் பயிற்சிநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக வவுனியா, மன்னார் மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஆர்.பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'புதிய பயிற்சிநெறிகள் பகுதிநேரமாகவும் முழுநேரமாகவும் ஆரம்பிக்கப்படவுள்ளன. கீழ்வரும் பயிற்சிநெறிகளுக்கு பாடசாலையை விட்டு விலகியவர்கள், தொழில் வாய்ப்பின்றியுள்ள இளைஞர், யுவதிகள் விண்ணப்பிக்கமுடியும்.

2015ஆம் ஆண்டுக்கான பயிற்சிநெறிகளாக வைரவபுளியங்குளத்தில் கணினி மென்பொருள் தொழில்நுட்பவியலாளர், மின்னியலாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், குளிரூட்டலும் வாயு சீராக்கல்;, காய்ச்சி இணைப்பாளர் பயிற்சிகளும் தோணிக்கல் நிலையத்தில் தோல் உற்பத்தியாளர், தையல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப  பயிற்சிகளும் கோவில்குளம் நிலையத்தில் அழகுக்கலை, தையல், கணினி வன்பொருள் பயிற்சிகளும் மதவுவைத்தகுளம் சென்சுலான் நிலையத்தில் கணினி கிராபிக் பயிற்சியும் செட்டிகுளம் நிலையத்தில் நீர்குழாய் பொருத்துநர், மின்னியலாளர், தச்சுவேலை பயிற்சிகளும்; கல்மடு பயிற்சி நிலையத்தில் தையல் பயிற்சியும் பூந்தோட்டம் நிலையத்தில் தச்சுவேலை, அலுமினியம் புனைபவர் பயிற்சிகளும் நடைபெறவுள்ளன.

எனவே, இதற்கான விண்ணப்பங்களையும் மேலதிக விபரங்களையும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை, இல. 108 புகையிரத நிலைய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியா என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கமுடியும்.  அல்லது 024 2221617 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக  தொடர்புகொள்ளமுடியும் எனவும் அவர் கூறினார்.

இந்தப் பயிற்சிநெறிகளை  நிறைவுசெய்வதன் ஊடாக என்.வி.கியூ. மட்டத்திலான சான்றிதழை பெறமுடிவதுடன், அரச அங்கிகாரம் மிக்க பயிற்சிநெறியையும் நிறைவுசெய்ய முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X