2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நிதி பற்றாக்குறையால் பாலம் திருத்தப்படவில்லை: நீர்பாசனத் திணைக்களம்

Menaka Mookandi   / 2015 ஜனவரி 28 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம் - உருத்திரபுரம் ஆகிய பிரதேசங்களை இணைக்கின்ற வீதியிலுள்ள பிரதான பாலம் நிதிப் பற்றாக்குறையால் இதுவரை காலமும் புனரமைக்கப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் நிதி கிடைத்ததும் பாலம் புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள கூறியது.

கிளிநொச்சி, கனகபுரத்தில் இருந்து உருத்திரபுரத்துக்கு செல்லும் பிரதான வீதியாகவும் இரண்டு கிராமங்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் வீதியாகவும் உள்ள இந்த  வீதியில் அமைந்துள்ள பாலம் கடந்த ஆண்டு இறுதியில் பெய்;த கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மிக ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.

இந்த பாலம்; மிகவும் பழமையானது. இப்பாலத்தை புனரமைப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் இந்த பாலம் இருப்பதால் நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோதே திணைக்களம் மேற்கண்டவாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X