2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

37 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைப்பு

Menaka Mookandi   / 2014 ஜூன் 01 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணுவ சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையின் போதே இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதாக இராணுவ தலைமையகம் தெரிவித்தது.
 
இந்த நேர்முகத் தேர்வில், குறித்த மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் 44 பேர் தோற்றிய போதிலும் அவர்களில் 37பேர் மாத்திரமே தெரிவானதாக இராணுவம் குறிப்பிட்டது.

இவ்வாறு இணைக்கப்பட்டவர்கள், இராணுவத்தின் பொதுச் சேவையணி, இராணுவ பொறியியற் பிரிவு மற்றும் பொறியியற்சேவை றெஜிமன் ஆகிய படையணிகளிலேயே சேவைக்கமர்த்தப்படவுள்ளனர் என்றும் இராணுவ தலைமையகம் மேலும் கூறியது.

  Comments - 0

  • புத்தளம் குரங்கார் Sunday, 01 June 2014 01:27 PM

    முஸ்லிம் நபர்களையும் இராணுவத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X