2025 ஜூலை 19, சனிக்கிழமை

ரூ.40 மில்லியன் செலவில் பள்ளிமுனை விளையாட்டு மைதானம் புனரமைப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தை புனரமைக்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாசன் தெரிவித்தார்.

குறித்த விளையாட்டு மைதானத்தை புனரமைத்துத் தருமாறு மன்னார் நகர சபையினால், நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

இதற்கமைவாக பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தைப் புனரமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினா 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகர அபிவிருத்தி அதிகார சபையும், மன்னார் நகர சபையும் இணைந்து நகர சபைக்குட்பட்ட பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தினை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

முதற்கட்டமாக குறித்த விளையாட்டு மைதானத்தில் கிரவல் மண் கொட்டப்பட்டு மைதானம் செப்பனிடப்பட்டு சமப்படுத்தப்பட்டு வருவதாக மன்னார் நகர சபையின் உப தலைவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X