2025 ஜூலை 19, சனிக்கிழமை

கடும் வெப்பத்தால் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்  

 

கடும் வெப்பம் காரணமாக மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று  இரவு 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, ஊர்காவற்துற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.  

வியாவில் - காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த நாகமணி நாகராஜா (வயது 53) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

வௌ்ளிக்கிழமை (25) பகல், குறித்த நபர் அந்தியேட்டி நிகழ்வு ஒன்றுக்குச் சென்றுவிட்டு, சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது மயங்கி வீழந்துள்ளார்.  

இதையடுத்து, குறித்த நபர், வீதியால் சென்றவர்களால் காப்பாற்றப்பட்டு காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் இந்நிலையிலேயே சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். 

உடற்கூற்று பரிசோதணையின் பின், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X