2025 ஜூலை 19, சனிக்கிழமை

‘போராட்டத்தில் கலந்துகொள்ளவும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன் 

நாளை  சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு, அனைவரும் கலந்துகொள்ளுமாறு, கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். 

 கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கிளிநாச்சி - பரவிப்பாஞசான் பகுதியில் இன்று (29) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர். 

அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

நாளை  சர்வதேச காணாமல் போனோர் தினமாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம், அந்தந்த மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது. அனைத்து பொதுமக்கள், அமைப்புகள், அரசியல்வாதிகளையும் குறித்த போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.    இதேவேளை, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த எமது புலம்பெயர் உறவுகளும், எமக்காக ஆதரவு தெரிவிக்கும் வகையில், போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X