2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அந்த 30 விநாடிகள் கதையை கேளுங்கள்

Ilango Bharathy   / 2021 ஜூன் 14 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 திமிங்கிலத்தால் விழுங்கப்பட்ட ஆழ்கடல் நீச்சல் வீரரொருவர்  (டைவர்) , மீண்டும் வெளியில் உயிருடன் வந்த அதிசயம், அமெரிக்காவின் கேப் கோட் கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மைக்கேல் பெக்கார்ட் என்னும் 56 வயதான நபரே, இவ்வாறு திமிங்கிலத்தின் வாய்க்குள் சென்று உயிர் தப்பிய நபராவார். இவர், கடந்த 40 வருட காலமாக ஆழ்கடல் நீச்சல் வீரராகக் காணப்படுகிறார்.

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று காலை, இவர் திடீரென்று இருளுக்குள் சென்றதாக உணர்ந்தாராம். முதலில் இவர் தன்னை ஒரு சுறாமீன் தாக்கியுள்ளது என்று நினைத்துக் கொண்டாராம். ஆனால் பின்னர், தனக்கு கூரிய பற்களால் தாக்கப்பட்ட வலி ஏதும் இல்லாததால், தான் திமிங்கிலத்தால் விழுங்கப்பட்டதாக உணர்ந்துள்ளார்.



இது பற்றி அவர் கூறுகையில், ”நான் திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் போய் மடியப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டேன். அப்பொழுது எனது மனைவியும், 12 மற்றும் 15 வயதான மகன்மாருமே நினைவுக்கு வந்தனர். அவர்களை நினைத்து மிகுந்த துயரம் அடைந்தேன். ஆனால் அதன் பின்னர், அந்த திமிங்கலம் வாயை இரண்டு பக்கமும் ஆட்டி அசைத்தது.

சில நிமிடங்களில் எனக்கு ஒரு வெளிச்சம் தெரிந்தது. அப்போது எனக்கு ஆகாயத்தில் வீசப்பட்டது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. நான் திமிங்லத்தின் வாய்க்குள் இருந்து விடுவிக்கப்பட்டு நீரில் மிதக்கலானேன். இருப்பினும் என்னால் இதனை நம்ப முடியவில்லை. திமிங்கிலத்தின் வாய்க்குள் நான் சுமார் 30 வினாடிகள் வரை இருந்ததாக உணர்கிறேன். இச்சம்பவத்தில் நான் எனது கால்கள் உடைந்து விட்டன என்று நினைத்தேன்.

ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. சிறு காயங்களுடன் தப்பித்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரை, நான் அந்த திமிங்கலத்துக்கு சுவையாக இருக்கவில்லை ” எனத் தெரிவித்தார். இச்சம்பவத்தை, படகிலிருந்து பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் சகாவான ஜோசையா மாயோ என்பவர், உடனடியாக செயற்பட்டு தன் நண்பனை கடலிலிருந்து மீட்டெடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .