2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காணாமல் போகும் சாக் கடலுக்காக 200 பேர் நிர்வாணமாகினர்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பென்சர் டூனிக் என்கிற புகைப்படக் கலைஞர் ஒருவர், சுற்றுசூழல் பாதிப்புகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் நிர்வாண புகைப்படங்களை எடுத்துள்ளார்.

குறிப்பாக, காணாமல் போகும் சாக் கடலின் பாதிப்புகளை பிரதிபலிக்கும் நோக்கில் ஒரு நிர்வாண புகைப்படத்தை அவர் எடுத்துள்ளார்.

இதற்காக சாக் கடல் அருகில், 200 பேரை நிர்வாணமாக நிறுத்தி, அப்படத்தை அவர் எடுத்துள்ளார்.

சாக்கடல் அல்லது இறந்த கடல் (Dead Sea, உப்புக் கடல்) எனும் நீர் நிலையானது மேற்குக் கரை, இஸ்ரேல், ஜோர்தான் ஆகியவற்றின் எல்லையில், பெரும்பிளவுப் பள்ளத்தாக்கின் ஜோர்தானியப் பகுதியில் அமைந்துள்ளது

கடல் மட்டத்திலிருந்து தற்போது 423 மீட்டர் (1,388 அடி) கீழே அமைந்திருக்கிற சாக் கடல், தொடர்ந்தும் கீழிறங்குகிறது. இவ்விறக்கம், பூமியின் மேல் ஓடுகளின் விரிசலினால் ஏற்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ – பிபிசி

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .