2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நெற்றிப்பொட்டில் சுட்டும் உயிர்பிழைத்த நாய்

Editorial   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவில் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த "ஆர்தர்" எனப்படும் "கார்கி" வகை  நாய் ஒன்று நெற்றிப்பொட்டில் சுடப்பட்ட பின்பும் உயிர்பிழைத்துள்ளது.

‘விலங்குகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பென்சில்வேனியா கூட்டமைப்பு’ என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாயின் புகைப்படங்களை வெளியிட்டு அதன் விபரங்களை பகிர்ந்துள்ளனர். அந்த அமைப்பு “ஆர்தர், உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம் , இப்படிப்பட்ட காயத்துக்கு பின்னரும் உயிருடன் இருப்பது சாதாரண விஷயம் இல்லை" எனக் கூறியுள்ளனர்.

மேலும் 'ஆர்தர்' எவ்வாறு மீட்கப்பட்டது என்பது பற்றி கூறுகையில், " லான்காஸ்டர் கவுண்டியின் நியூ ஹாலண்ட் எனப்படும் கிராமப்புற நகரத்தில், ஒரு வேலிக்கு அடியில் ஊர்ந்து செல்ல முயன்ற போது நெற்றியில் சுடப்பட்ட காயத்தோடு ஆர்தர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவ்வேலியின் உரிமையாளரிடம் விசாரித்த போது நெற்றியிலிருந்த அக்காயம் வேலியில் இருக்கும் கம்பி குத்தியதால் வந்திருக்கும் என்று நினைத்துள்ளனர். ஆனால் பின்னர் கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்த பின்னரே அக்காயம் குண்டடிபட்டதனால் வந்தது என தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .