2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மோசடிக் கும்பலிடம் சிக்கி மொடல் அழகியான இளைஞர்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 21 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மோசடிக் கும்பலொன்று, வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர் ஒருவரை கம்போடியாவுக்கு அழைத்துச் சென்று அவரை மொடல் அழகி போன்று  நடிக்க வைத்து சபலப் புத்திக்காரர்களிடம் பணம் பறிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ‘நீதிராஜன்‘. இவர் வெளிநாட்டில் பணிபுரிவதற்கு நீண்ட காலமாக முயற்சி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ‘மகாதீர் முகமது‘  என்பவர் இரண்டரை லட்சம்ரூபா வழங்கினால் கம்போடியாவில் ‘டேட்டா என்ட்ரி ஒப்பரேட்டர் ‘ வேலை வாங்கித் தருவதாக் கூறியுள்ளார்.

இதற்கு நீதி ராஜன்  சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சுற்றுலா விசாவில் நீதிராஜன் கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கு போன பின்னரே அவர் சீனாவைச்  சேர்ந்த சைபர் மோசடி கும்பலொன்றுக்கு 3000 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த கும்பலானது  இன்ஸ்டாகிராம், முக நூல், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மொடல் அழகிகளின்  பெயரில் போலியான கணக்குகளைத்  தொடங்கி ,தொழில் அதிபர்களுடன் மயக்கும் விதமாகப் பேசி, அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தி தாங்கள் பரிந்துரைக்கும் நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்ய வைத்து அவர்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில் அக்கும்பலானது  நீதிராஜனையும் மொடல் அழகி  போன்று நடித்து சபலபுத்திக்காரர்களிடம் பணம் பறிக்கக்  கட்டாயப்படுத்தியுள்ளனர்.

ஆரம்பத்தில் அவ்வாறு நடிக்க மறுத்த நீதி ராஜனை சிறை போன்ற அறையில் அடைத்து உணவு வழங்காமல், சித்ரவதை செய்து, குறித்த பணியில் ஈடுபட வைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கும்பலுக்குத் தெரியாமல் இந்திய தூதரகத்தை அணுகிய நீதிராஜன் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்துத் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து இந்திய தூதரகத்தின் உதவியுடன் ஒருவழியாக தமிழகம் திரும்பியுள்ள நீதிராஜன், தன்னைப் போல்  1500 தமிழக இளைஞர்கள் குறித்த மோசடி கும்பலிடம் சிக்கியுள்ளனர் எனவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தன்னை ஏமாற்றி அழைத்துச்சென்று கம்போடியாவில் விற்ற மோசடி ஏஜெண்ட் மகாதீர் முகமது மற்றும் சையதுருஹானி ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை  எடுக்குமாறும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .