2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

10 தொற்றாளர்கள் அடம்பிடிப்பு : அழைத்துச் செல்லும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பு

Freelancer   / 2021 ஜூன் 07 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாதென தெரிவித்துள்ள அவர்கள், எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சிகிச்சை நிலையத்துக்கு செல்வது தொடர்பில் தொற்றாளர்களுக்கு சுகாதாரதுறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். எனினும், அதற்கும் செவிசாய்ப்பதற்கு தொற்றாளர்கள் மறுத்துவிட்டனர். அதனால், அந்த 10 பேரையும் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

அந்த 10 பேரையும் அழைத்துச் செல்ல சுகாதாரத் துறையினரால் அம்புலன்ஸ் வண்டிகள், நேற்று (06) அனுப்பிவைக்கப்பட்டன. எனினும், தமக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை எனவும், பரிசோதனைகளில் நம்பிக்கையில்லை எனவும் தெரிவித்த அவர்கள் அம்புலன்ஸ் வண்டிகளில் ஏற மறுத்தனர்.

அத்துடன் தம்மை வற்புறுத்தினால் உயிரை மாய்ப்போம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையிலே​யே அந்த 10 தொற்றாளர்களையும் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .