2024 மார்ச் 28, வியாழக்கிழமை

PTAயின் கீழ் கைதானவர்கள் விடுதலை

Niroshini   / 2021 ஜூலை 19 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால், இன்று  விடுதலை செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் ஐவரிடம் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எவையும் இல்லாததால், வழக்கை தொடர முடியவில்லை என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்பையில் கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மறுவாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரும் உள்ளார்.

மேலும், இளவாலை பொலிஸ் பிரிவை சேர்ந்த இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த தலா ஒருவரும் என நால்வர், யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாத முற்பகுதியில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டுதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 3 மாதங்களின் பின்னர் சந்தேக நபர்கள் ஐவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர். ஐவருக்கும் எதிராக பயங்கரவாத சட்டத்தின் பிரிவின் கீழ் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சந்தேக நபர்கள் ஐவரிடம் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எவையும் இல்லாததால் வழக்கை தொடர முடியவில்லை என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதனால் சந்தேக நபர்கள் ஐவரையும் வழக்கிலிருந்து விடுவித்து, விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X