2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஊடகங்கள் சொல்லும் அளவிற்கு பிரச்சினை இல்லை

Ilango Bharathy   / 2022 ஜனவரி 16 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

”ஊடகங்கள் சொல்லும் அளவிற்குப் பிரச்சினை இல்லை. பிரச்சினை எல்லாம் ஊதிப்பெருப்பிக்கப்படுவதாகத்தான் என்னால் பாக்கப்படுகின்றது” என கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (15) முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மாமடுச்சந்தி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தின் அறநெறி பாடசாலையின் ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும்தெரிவிக்கையில் ”அறநெறி பாடசாலை பிள்ளைகள் தங்களுடைய ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்கள் பாராட்டக்கூடியது அதனை ஊக்கிவித்தவர்களுக்கும் பாராட்டினையும் வாழ்த்துக்களையும் சொல்லிவைக்கின்றேன்.

எங்களுக்கு ஒரு காலகட்டத்தில் ஆயுத போராட்டத்திற்குரிய தேவை ஏற்பட்டிருந்தது உண்மைதான் ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்த்துடன் 1987 ஆம் ஆண்டுடன் நாங்கள் அதற்கு முற்றுப்புள்ளி கண்டிருக்கவேண்டம்.

சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது என்பது போல தங்கள் சுயலாபத்திற்காக மக்களை தவறாக வழிநடத்தி அவர்களை பலிகொடுத்தது மாத்திரமல்ல ஈடுவைக்கின்ற செயல்களையும் செய்து விட்டுபோய்விட்டார்கள் தொடர்ந்து இருக்கின்றவர்கள் அதனைசெய்துகொண்டிருக்கின்றார்கள்.

நீங்கள் சரியானவர்களை தெரிவு செய்யுங்கள் அப்போதுதான் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறாலம் என்று கடந்த காலங்களிலும் சொல்லியுள்ளேன்.

 முன்னேறலாம் என்பது அடிமைத்தனமான வாழ்கையல்ல கௌரவமான வாழ்கையுடன் இன்று நாங்கள் அப்படித்தான் இருக்கின்றோம் இந்த அழிவு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் எங்கள் கௌரவத்தில் ஏதாவது மாசு படவில்லை என்று நான் நினைக்கின்றேன் அப்படி இருக்குமாக இருந்தால் நீங்கள் என்னிடம் சொல்லாம்.


இன்று இருக்கின்ற கௌரவமான நிலமையினை பாதுகாத்து நாங்கள் மேலும் வளர்த்தெடுக்கவேண்டும் அப்படியான நிலமைக்கு நாங்கள் செல்லவேண்டுமாக இருந்தால் சரியாக நீங்கள் அடையாம் கண்டு உங்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்யவேண்டும்.

இன்று நீங்கள் பல பிரச்சினைகளை முன்வைத்துள்ளீர்கள் இந்த பிரச்சினைகள் எனக்கு தெரியும் போர் காலத்தில் தீர்க்கமுடியாது ஏன் என்றால் அப்போது கோவில்களுக்கு பணம் கேட்கும் போது என்னால் முடிந்த அளவிற்கு நான் கொடுத்தோன் ஆனால் எனக்கு தெரியும் அந்த முழுக்காசும் கோவில்களுக்கு போயிருக்காது அன்று யார் இங்கு நாட்டாமை செய்துகொண்டிருந்தார்களோ அவர்களுக்த்தான் அதில் பெரும்தொகை பணம் போயிருக்கும்

நாங்கள் 80 களில் ஆயுதம் தூக்கியபோது அன்று இருந்த ஆட்சியாளர்கள் ஒரு பாராபட்சமாக அல்லது மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அல்லது இன ரீதியாகத்தான் அணுகினார்கள் ஆனால் இன்று உள்ள அரசாங்கம் அப்படி அல்ல நானும் அரசின் மூத்தஅமைச்சராக இருக்கின்றேன்.

ஜனாதிபதி கோட்டபாஜறாஜபக்ச தலைமையில் பிரதமர் மகிந்தறாஜபக்ச அவர்களின் வழிகாட்டலில் இந்த அரசாங்கம் முன்னோக்கி செல்கின்றது.

ஆனால் ஊடகங்கள் மக்களுக்கு தவறான வழிகளை வெளிப்படுத்துவதாகத்தான்  என்னால் உணரக்கூடியவாறு உள்ளது. ஊடகங்கள் சொல்லும் அளவிற்கு பிரச்சினை இல்லை. பிரச்சினை எல்லாம் ஊதிப்பெருப்பிக்கப்படுவதாகத்தான் என்னால் பாக்கப்படுகின்றது.

எனவே மக்களின் பிரச்சினைகள் ஒன்று ஒன்றரை ஆண்டுகளுக்குள் தீர்த்துவிடுவோம். நாங்கள் ஆட்சியினை பொறுப்பெடுக்கும் போது கடந்த கால ஆட்சியாளர்கள் கஜானவை திறைசேரியினை காலிபண்ணிவிட்டுத்தான் எங்களுக்கு கொடுத்தார்கள் என்றார். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X