2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கேப்பாப்புலவை சூழ பலத்த பாதுகாப்பு

Niroshini   / 2021 ஜூலை 15 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொலிஸார், விமானப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர்   பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், கேப்பாப்புலவில் தனிமைப்படுத்தப்பட்டுய்யனர்.

அவர்களது தனிமைப்படுத்தல் முறையற்றதெனக் கண்டித்து, முல்லைத்தீவு நகரம் மற்றும் கேப்பாப்புலவு விமானப்படை தளத்துக்கு முன்னால் இன்று (15) ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்தே, முல்லைத்தீவு நகர் மற்றும் கேப்பாப்புலவு விமானப்படை முகாம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கேப்பாப்புலவு விமானப்படை தளத்துக்கு முன்னாள் பொலிஸார், விமானப்படையினர், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, கண்காணிப்பும் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கேப்பாப்புலவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமுக்கு, இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் உள்ளிட்டவர்கள் வருவதை தடுப்பதற்காக பல்வேறு வீதி தடைகளில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .