2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கொரோனா சடலத்தை கொண்டு சென்ற ஊர்தி விபத்து

Niroshini   / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

முல்லைத்தீவு - கொக்குளாய் வீதியில், நேற்று (15)  மாலை,  ஓட்டோவுடன், கொரோனா தொற்றாளி ஒருவரின் சடலத்தை, திருகோணமலைக்கு கொண்டு சென்றிருந்த  ஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது ஊர்தி சாரதி படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்கால்.

அத்துடன், வாகனமும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சொந்தமான வாகனம் ஒன்றில், முல்லைத்தீவு மாவட்டத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம், நீண்ட நாள்களாக எரியூட்டப்பாத நிலையில், வவுனியா போன்ற வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, திரும்பிக்கொண்டு வந்த வைத்திருந்த நிலையில், குறித்த சடத்தை திருகோணமலையில் எரியூட்டுவதற்காக, நேற்று (15) மாலை எடுத்து சென்ற போதே, இந்த விபத்து  இடம்பெற்றுள்ளது.

 உடலம் ஏற்றி சென்ற ஊர்தியும் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்த சாரதி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்

விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறித்த சடலம், திருகோணமலை கொண்டுசெல்லதற்கான ஏற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X