2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தடுப்பூசி பெறுவதில் அக்கறையில்லை

Freelancer   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

கொரோனா தடுப்பூசி பெறுவதில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு  அக்கறையற்ற நிலை காணப்படுவதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.  

சமூக செயற்பாட்டாளர் காசிநாதர் ஜெயராஜாவின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா பல்கலைக்கழகத்தில் அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது. 

எனினும் தடுப்பூசி பெறுவதில் பலரும் அக்கறை காட்டியதாக தெரியவில்லை. பைசர் தடுப்பூசியா செலுத்துகின்றனர் என கேள்வியை எழுப்பினார்களே தவிர சினோபாம் ஊசி என்றவுடன் பின்னடித்தனர்.  

 தடுப்பூசி பெற்றவர்களின் இறப்பு வீதம் குறைவாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசியை பெற ஆர்வம் காட்டவேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .