2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

படையினரால் மிளகாய் உற்பத்தி

Niroshini   / 2021 ஜூலை 01 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய்களை, உள்ளுர் சந்தைகளில் விநியோகித்துள்ளதாக, இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலுக்கமைய 'துரு மித்துரு நவ ரட்டக்' திட்டத்தின் கீழ், விவசாய உற்பத்தியில் தன்னிறைவை இலக்காக கொண்டு, விவசாய பண்ணையில் மிளகாய் உற்பத்தியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் தெரிவித்தனர்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சூழவுள்ள பொதுமக்களின் பெருமளவான நிலப்பரப்பை, இராணுவத்தினர் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பபு வலயமாக அறிவித்துள்ளனர்.

அப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் சுமார் 32 வருட காலங்களுக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், தம்மை சொந்த இடங்களில் மீள் குடியேற்றுமாறு கோரி, கடந்த 11 வருடங்களுக்கும் மேலாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குறித்த காணிகளில், இராணுவத்தினர் விவசாய பண்ணைகள், கால்நடை பண்ணைகள் என்பவற்றை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .