2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’யாழில் ’2ஆவது டோஸ் தடுப்பூசி வழங்கப்படும்;’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி, நாளை (30) முதல் வழங்கப்படவுள்ளன என, வடமாகாண பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி க. நந்தகுமாரன் தெரிவித்தார்.

இது தொடர்ந்துரைத்த அவர், 18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, முன்பு வழங்கப்பட்டதன் படியே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தினத்தில் இத்தடுப்பூசிகள்  வழங்கப்படும் என்றார்.

அவர்களுக்கான தடுப்பூசி ஏற்றப்படும் தினம் பற்றிய விவரங்கள் அந்தப் பிரதேசத்துக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகள் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறியத்தரப்படும் என்றும், அவர் கூறினார்.

அத்துடன், தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூலம் ஏனையோருக்கு அறிவிக்கப்படுமெனத் தெரிவித்த அவர், தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு அழைத்து வர முடியாத நிலையில் படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு முதல் தடவை வழங்கப்பட்டதைப் போன்றே, அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

இதேவேளை, 'யாழ்ப்பாணம் மாவட்டத்தில், சிலவகை மருந்துகள், ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும், வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும், யாழ். போதனா வைத்தியசாலை, சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் முதல் தடவை வழங்கப்பட்டதை போன்றே செப்டெம்பர் மாதம் 4, 11ஆம் திகதிகளில், இரண்டாவது டோஸுக்கான தடுப்பூசியை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றும், நந்தகுமாரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .