2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழ். நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 01 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்  அமுல்படுத்தப்பட்டு உள்ள இந்நிலையில், யாழ்ப்பாணம் நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது 

குறிப்பாக, நேற்றைய தினம் (31), யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 375க்கு மேற்பட்டோர் கொரோனா  தொற்றாளர்களாக  இனங்காணப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனையோர் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும்,  அவ்வாறான அறிவுறுத்தல்களையும் மீறி, பொதுமக்கள் தற்பொழுது வீதிகளில் வழமை போல, அதாவது, அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனையோரும் வீதிகளில் தற்பொழுது சுதந்திரமாக நடமாடி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், பயணத் தடை அமுல்படுத்தப்பட்ட நாளிலிருந்து இன்றைய தினம் வரை 2,000   தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .