2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அடை மழையால் இயல்பு நிலைபாதிப்பு;வீடுகள் மூழ்கின

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.அறூஸ்

அம்பாறை மாவட்டத்தில்  தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு  வீடுகளும் நீரில் மூழ்கியு ள்ளன.மக்களின் இயல்பு வாழ்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று, அட்டாளைச் சேனை, பாலமுனை, ஒலுவில். நிந்தவூர், காரைதீவு, கல்முனை, நட்பிட்டிமுனை, இறக்காமம்  ஆகிய பிரதேசங்களில்  வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அநேகமான உள்வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, உள்ளூர் போக்குவரத்துக்கள்   பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான மழை பெய்து வருவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கடல் கொந்தளிப்பாக இருப்பதனால் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளது.  

சில பிரதேசங்களில் வடிகால்கள் துப்புரவு செய்யப்படா மலுள்ளதால் மழை நீர் வழிந்தோட முடியாத நிலை காணப்படுகின்றன. சில பிரதேசங்களில் இயந்திரங்கள் மூலம் வடிகால்கள் தோண்டப்பட்டுள்ளபோதிலும் முறையாக நீர் வழிந்தோடவில் லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 மழை நீர் தேங்கியுள்ள வடிகால்களை துப்புரவு செய்து மழை நீர் வழிந்தோட முடியாதவாறு தேங்கி நிற்கும் இடங்களிலிருந்து நீரை வடிந்தோடச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், மழை தொடருமாயின் அம்பாறை மாவட்ட த்தின் பல தாழ்ப் பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதோடு பொதுமக்கள் இடம்பெயரும் நிலை அதிகரிக்கக்கூடும் எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .